ராஜாங்கனையே சதாரதன தேரர் விளக்கமறியலில்
#SriLanka
#Colombo
#Court Order
#Prison
#sri lanka tamil news
Prathees
2 years ago
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய ராஜாங்கனையே சதாரதன தேரரை எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சதாரதன தேரரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்தே அது இடம்பெற்றுள்ளது.
மத நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனையைச் சேர்ந்த சதாரதன தேரர் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுராதபுரம், ஷ்ரவஸ்திபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்த சாகர தேரர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.