25 லட்சம் பெறுமதியான ஏலக்காய்களை திருடிய மூவர் கைது
#Sri Lanka
#Arrest
#Police
#Robbery
#Lanka4
#sri lanka tamil news
Benart
3 months ago

கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூன்று சந்தேக நபர்களை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காயின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காய்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இப்பலோகம, பண்டாரகம மற்றும் நிகடலுபொத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்