யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் தூக்கிட்டு தற்கொலை!
#SriLanka
#Jaffna
#Death
#France
#Suicide
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த இவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் இவர் இன்று அதிகாலை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட போர்வையால் (பெட்சீட்) கழுத்தை நெரித்து தன் உயிரைப் போக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இவர் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 33 வயது மதிக்க கூடிய இவர் மனநலம் குன்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.