12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது

#SriLanka #Arrest #Police #Anuradapura #drugs #Lanka4
Kanimoli
2 years ago
12 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது

நுராதபுரம் பதஹிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பராக்கிரமபுர பதஹிய பகுதியில் வைத்து 4 1/2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ்ப்பாணம் கோப்பாய் 51வது படைப்பிரிவு இராணு முகாம் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தங்கம் உள்ளிட்ட வேறு குற்றச்சாட்டுகளுடனும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

 இதன்போது கைப்பற்றப்பட்ட கஞ்சா ரூபா 12 இலட்சம் பெறுமதியானது என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் பதஹிய பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!