பெண் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்
#SriLanka
#Lanka4
Prabha Praneetha
2 years ago
வெயங்கொட, கும்பலொலுவ பிரதேசத்தில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த நிலையில் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் இசைக்குழுவில் பணிபுரியும் மீரிகம இருபது ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிளே நபரொருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.