நான்கு நாள் பயணமாக இந்தியா வரும் நேபாள பிரதமர்

#India #PrimeMinister #Tourist #Nepal
Prasu
3 years ago
நான்கு நாள் பயணமாக இந்தியா வரும் நேபாள பிரதமர்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, அரசுமுறை பயணமாக வரும் 31ம் தேதி இந்தியா வருகிறார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் நான்கு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அவருடன் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை பிரசந்தா சந்தித்து பேச உள்ளார். 

பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார். பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4