இரு இளைஞர்களைப் பலி எடுத்த தொலைபேசி அழைப்பு

#SriLanka #Death #Lanka4 #Train #sri lanka tamil news
Prathees
2 years ago
இரு இளைஞர்களைப் பலி எடுத்த தொலைபேசி அழைப்பு

புகையிரத பாதையில் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டு பயணித்த இரு இளைஞர்கள் இன்று அதிகாலை 5.45 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

 கீனவல புகையிரத நிலையங்களுக்கு இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 வெயாங்கொட வதுருவ பிரதேசத்தை சேர்ந்த கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.எகதிவங்க என்ற 19 வயதுடைய இளைஞனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் புகையிரத பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும் காலை சுற்றுலா செல்வதற்கு புகையிரத பாதை வழியாக வதுரவ புகையிரத நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 இருவரும் தொலைபேசி அழைப்பில் பயணித்த போது பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்தில் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!