பாணந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு

#SriLanka #Death #Police #Women #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பாணந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு

பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று இரவு திடீரென உயிரிழந்துள்ளார்.

 அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

 பாணந்துறை, திக்கல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று நேற்று இரவு அவரது வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

 சந்தேகத்திற்கிடமான பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் கொண்டு வரப்பட்ட நிலையில், அவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!