பனாமாவில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு

#America #world_news #Breakingnews
Mani
2 years ago
பனாமாவில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனமா - மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.

பனாமா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்நாட்டில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குழுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!