வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்!
#SriLanka
#Sri Lanka President
#IMF
Mayoorikka
2 years ago
கடன் வேலைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மே 11 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவர், பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மசஹிரோ நொசாகி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.