உயிரிழந்தவர்களின் உடலை தோண்டி விழா கொண்டாடும் இந்தோனேசிய மக்கள்

#Death #Festival #people #Indonesia
Prasu
3 years ago
உயிரிழந்தவர்களின் உடலை தோண்டி விழா கொண்டாடும் இந்தோனேசிய மக்கள்

இறந்தவர்களின் உடலினை வருடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து அவர்களது உறவினர்கள் கொண்டாடுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் டோராஜாவில் வாழ்ந்து வரும் மக்களே தமது இறந்த அன்புக்குரியவர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்லறைகளில் இருந்து வெளியே அழைத்துச் வந்து கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

இந்த திருவிழாவை ‘மானீன்’ என்று சிறப்பாக அழைக்கப்படுகின்றது. இவ்வாறாக இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர் நன்றாக சுத்தம் செய்யப்படுகின்றனர்.

அதனை தொடர்ந்து புதிய ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இந்நிலையில் இறந்தவர்களின் தொலை தூரத்தில் வசிக்கும் உறவினர்களும் பலவாறாக கதைகளை பரிமாறிக்கொள்ளவும், விருந்துண்டு மகிழவும் வருகை தருகின்றனர். 

இறந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிகரெட்டுகள் என்று அவர்களிற்கு பிரியமான தீன்பண்டங்களை எல்லாம் வழங்குகின்றனர். ஏனென்றால் ஆவி உடலுக்கு அருகில் உள்ளது என்றும் தனக்கு நல்ல கவனிப்பை அது விரும்புகின்றது என்றும் இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

இவ்வாறாக புதைக்கப்பட்டவர்களின் உடல்களை பதப்படுத்தி வைப்பதற்காக மருந்து வகைகளை இவர்கள் பயன்படுத்தி பாதுகாக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4