மூன்று வயதான குழந்தையை தலைகீழாக தூக்கி அடித்த தந்தை!

#SriLanka #Arrest #Crime
Mayoorikka
2 years ago
மூன்று வயதான குழந்தையை தலைகீழாக தூக்கி அடித்த தந்தை!

தன்னுடைய மூன்று வயதான குழந்தை தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தையை கைது செய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

 அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த மேற்படி நபர், மனைவியின் முன்பாக சென்று நஞ்சருந்தியுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபரையும் குழந்தையையும் பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 அடிப்படை சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பியோடியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

 சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!