பஸ்ஸுக்காக காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் : சம்பவ இடத்திலேயே பலி

#SriLanka #Death #Student #Accident #Lanka4 #sri lanka tamil news #kurunagala
Prathees
2 years ago
பஸ்ஸுக்காக காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் : சம்பவ இடத்திலேயே பலி

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ஜீப் மோதி உயிரிழந்துள்ளார்.

 இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இந்த விபத்து இன்று (20ஆம் திகதி) காலை குருநாகல், டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

 அந்த விபத்தில் அமோத்யா சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே உயிரிழந்தார்.

 ரத்மலே உயனஇ உஹுமிய பிதுருவெல்லவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மாணவி இரண்டாவது பிள்ளையாவார்.

 தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு வருவதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்த போதே குறித்த மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

 வீதியில் பயணித்த ஜீப் ஒன்றுஇ சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகிஇ மாணவி மீது மோதி  தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது.

 சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

 விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிலியந்தலை கோனாமடித்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!