மன்னாரில் 15 வயது மாணவியைக் காணவில்லை

#SriLanka #Mannar #Lanka4 #sri lanka tamil news #School Student #Missing
Prathees
2 years ago
மன்னாரில் 15 வயது மாணவியைக்  காணவில்லை

மன்னாரில் 15 வயது மாணவி காணாமல்போயுள்ளதாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளிஇ மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியே நேற்று காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

 குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும்இ இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!