தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

#Tamil Nadu #exam #Tamil Student #Tamilnews #Examination
Mani
2 years ago
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது, அதை தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு தேர்வு இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வானவர்களில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.66% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் இருந்தது. 

 பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி 90.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.36% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.99% ஆகவும் இருந்தது. அதாவது ஆண் மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிளஸ்-1 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.97% ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.20% தேர்ச்சி பெற்றுள்ளன. 

 மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிய www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!