பணி நேரத்தில் ஊழியர்கள் சுவிஸ் மற்றும் ஜேர்மன் மொழியை பேசக்கூடாது - ஹெல்வெட்டிக் ஏர்வேய்ஸ்

#Switzerland #Airport #Germany #language
Prasu
3 years ago
பணி நேரத்தில் ஊழியர்கள் சுவிஸ் மற்றும் ஜேர்மன் மொழியை பேசக்கூடாது - ஹெல்வெட்டிக் ஏர்வேய்ஸ்

பணி செய்யும் நேரத்தில் விமான பணியில் ஈடுபாடுள்ள ஊழியர்கள் சுவிஸ் ஜேர்மன் மொழியை பேசக்கூடாது என்று ஹெல்வெட்டிக் ஏர்வேய்ஸ் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கு காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்ததாவது, சுவிஸ் ஜேர்மன் பேச முடியாத மற்றைய ஊழியர்களுக்கு மதிப்பு வழங்கும் முகமாக சுவிஸ் ஜேர்மன் மொழியை மட்டும் பேசுவதை வேலை செய்யும் நேரத்தில் தவிர்க்குமாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது,

இருப்பினும் சுவிஸ் ஜேர்மன் மொழியை பேசும் சுவிஸ் நாட்டு ஊழியர்கள் இந்த அறிவிப்பால் எரிச்சல் அடைந்துள்ளதாக சுவிஸ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 சில ஊழியர்கள் தெரிவிக்கையில் விமான நிறுவனத்தின் வேண்டுகோளை சிலர்தான் பின்பற்றுவார்கள் என்றும் மற்றும் சிலர் இது சுவிஸ் விமான நிறுவனம் நாங்கள் அந்த நாட்டு மக்கள் எங்களை எவ்வாறு அந்த மொழியை பணியின் பொழுது பேசக்கூடாது என்று கூறலாம் என்றும் வாதாடுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4