10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

#School #School Student
Mani
2 years ago
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் பேரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேரும் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், 10 மற்றும் 11-ஆம் வகுப்புக்கான முடிவுகள் இன்று (மே 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!