ஆடைக்குள் மறைத்து 2.28 கோடி மதிப்பிலான தங்கம் கடத்த முயன்ற பயணி
#Arrest
#Airport
#Gold
#Smuggling
Prasu
2 years ago

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து வந்திறங்கிய பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த நபர் தனது ஆடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது. அந்த நபர் தங்கத் துகளை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து, அவற்றை தனது ஜீன்ஸ் பேண்ட், உள்ளாடை ஆகியவற்றில் மறைத்து கடத்தி வந்துள்ளார்.
இந்த சோதனையின் போது அதிகாரிகள் 4.265 கிலோ எடை கொண்ட ரூ.2.28 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



