கர்நாடகா முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
#India
#Tamil Nadu
#M. K. Stalin
#Tamilnews
Mani
2 years ago

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது இந்நிலையில் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ள சித்த ராமையா அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தி உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கும் உள்ள சித்திராமையா தொலைபேசியின் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலினை தொடர்பு கொண்டு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.



