ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இனி தடை இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
#Tamil Nadu
#Court Order
#Festival
#Pongal
#2023
#Tamilnews
Mani
2 years ago
தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் மதுரையின் பிற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும், சில மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுககு உரிமை உள்ளது எனவும் தெரிவித்தது.