தூக்க கலக்கத்தால் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுமிகள் பலி

#India #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
தூக்க கலக்கத்தால் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுமிகள் பலி

சென்னை ராணிப்பேட்டை மாவட்டம் வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது சலீம் வயது 45. சமீபத்தில், அவரும் அவரது மகள்கள் மற்றும் பிற உறவினர்கள் உட்பட 12 பேரும் இரண்டு கார்களில் ஆந்திராவில் உள்ள வஜ்ரகரூர் கிராமத்திற்கு குடும்ப உறுப்பினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.

துக்க நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி வந்த போது ராணிப்பேட்டை அடுத்த பெல் பைபாஸ் சாலையில் ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தபசு பாத்திமா(15), சுமையா பாத்திமா(17) ஆகிய இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஓட்டுநர் சதீஷ் உட்பட ஐந்து பேர் சிறு காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் உடல்கள் உடற்கூராய்வுக்ககா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்விற்காக சென்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை மற்றும் பரபரப்பையும் ஏற்பட்டுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4