கர்நாடக முதலமைச்சர் யார்! டெல்லிக்குச் செல்லும் சித்தராமைய்யா

#Election #Tamilnews
Mani
3 years ago
கர்நாடக முதலமைச்சர் யார்! டெல்லிக்குச் செல்லும் சித்தராமைய்யா

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், மந்திரி சபை வரும் 18ம் தேதி பதவியேற்க உள்ளது. இந்நிலையில், டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சித்தராமைய்யா டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதே நேரத்தில், தனது பிறந்த நாளை பெங்களூருவில் கொண்டாடி வரும் டி.கே.சிவக்குமார், தனது உழைப்பிற்கு பலன் கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் அரசியலை நிர்ணயிக்கும் ஒக்காலிக்கா மற்றும் லிங்காயத் சமூகத்தின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ள நிலையில், 100 எம்எல்ஏக்கள் சித்தராமைய்யாவை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் வகிப்பது தொடர்பாக சித்தராமைய்யா கருத்து கூறியதாகவும், அதனை சிவக்குமார் மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4