கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றி மக்களவைத் தேர்தலுக்கான அடிக்கல்: முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
#Election
#2023
#Election Commission
Mani
2 years ago

கர்நாடகத் சட்டமன்றத் தேர்தல் வெற்றி மக்களவைத் தேர்தலுக்கான அடிக்கல் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், பாஜக அரசின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தொண்டர்களிடையே ஊக்கமளித்ததாக கூறிய அவர், பண பலத்தால் பாஜக தேர்தலில் வெற்றி பெற நினைத்ததாக குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு அவர் இறுதிவரை பதிலளிக்க மறுத்துவிட்டார்.



