ஸ்ரீபெரும்புதூரில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது

#Tamil Nadu #Arrest #Youngster
Mani
2 years ago
ஸ்ரீபெரும்புதூரில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது

ஸ்ரீபெரும்புதுார்

ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய எல்லையில், குற்றச் சம்பவங்களை தடுக்க, 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதுார், வி.ஆர்.பி., சத்திரம் பகுதியைச் சேர்ந்த தினகரன், 20, ஹரிஷ், 18, ஆகியோர், சில ரவுடிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

இவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, கைதாகி சிறையில் உள்ள வி.ஆர்.பி., சத்திரத்தை சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவரது வீட்டில், மான் கொம்புகளை இருவரும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

விக்னேஷ் வீட்டில் இருந்த ஒரு ஜோடி மான் கொம்புகளை, போலீசார் நேற்று பறிமுதல் செய்து, தினகரன், ஹரிஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!