வைகாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14ம் தேதி திறப்பு!

#Temple #spiritual #Kerala
Mani
3 years ago
வைகாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14ம் தேதி திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மே 14-ம் தேதி திறக்கப்படுகிறது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், வைகாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் மே 14-ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார்.

பின்னர், வருகிற 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4