இருவருக்கிடையில் மோதல்: குடும்பஸ்தரின் உடலில் இருந்து பிரிந்த கை மற்றும் கால்

#SriLanka #Police #Attack
Mayoorikka
2 years ago
இருவருக்கிடையில் மோதல்: குடும்பஸ்தரின் உடலில் இருந்து பிரிந்த கை மற்றும் கால்

கொழும்பு ஹங்வெல்ல, கஹாஹேன பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவரின் கைகள் மற்றும் கால்கள் உடலில் இருந்து பிரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 இந்த தாக்குதலில் 25 வயதுடைய இளைஞனின் கைகள் மற்றும் கால்கள் உடலில் இருந்து பிரிந்துள்ளது.

 இதுதொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்று மாலை வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

 அத்துடன் தப்பியோட முற்பட்ட வேளையில் கால்களில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக, அவரது வலது கால் உடலில் இருந்து பிரிந்ததுடன், கைகளும் பிரிந்து தொங்கியுள்ளது. காயமடைந்த நபரின் வீட்டிற்கு அடுத்த வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 தாக்குதல் நடந்த பிற்பாடு பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு தெரியவந்ததாகவும், உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 அதனுடன் உடலில் இருந்து பிரிந்திருந்த காலின் பகுதியும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!