நடிகைகளை ஓரங்கட்டிய நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அசத்தல் போட்டோஷூட்

#Cinema #TamilCinema
Mani
2 years ago
நடிகைகளை ஓரங்கட்டிய நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அசத்தல் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், இப்படம் உலகளவில் பார்வையாளர்களிடையே பரவலாக பிரபலமடைந்தது மற்றும் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என படக்குழு உறுதி செய்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன், சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இரண்டுமே எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து இரு வீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த அன்பான தம்பதிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்

ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஆர்த்தி ரவி தனது சமீபத்திய போட்டோஷூட் படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்..

ஆர்த்தி ரவி டாப் நடிகைகளை ஓரங்கட்டியது போல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரது போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!