ஜப்பானில் ரூ.119 கோடி வசூல் குவித்த RRR படம்
#Cinema
#TamilCinema
#Japan
#Movies
Mani
1 year ago

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களில் ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸானது. இந்த நிலையில், ஜப்பானில் மட்டும் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலை ஆர்.ஆர்.ஆர். படம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.1,235 கோடி வசூலித்துள்ளது.
சமீபத்தில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இவ்விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



