காணி தொடர்பான சட்டங்களை உடனடியாக மாற்றியமைக்க ஜனாதிபதி பணிப்பு!

#SriLanka #Sri Lanka President #land
Mayoorikka
2 years ago
காணி  தொடர்பான சட்டங்களை உடனடியாக மாற்றியமைக்க ஜனாதிபதி பணிப்பு!

இலங்கையில் காணி தொடர்பான தற்போதைய கட்டளைச்சட்டங்களை தற்போதைய அபிவிருத்தி தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 பணிகளை விரைவுபடுத்துவதற்கு பொருத்தமான குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 காணி முகாமைத்துவ நிறுவனங்களின் கட்டளைச்சட்டங்கள் திருத்தம் மற்றும் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் காணி அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

 காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட காணி கொள்கைகளே தற்போதும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பாவனை தொடர்பில் பல்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்ட கட்டளைச்சட்டங்கள் தற்போதைய அபிவிருத்தித் தேவைகளுக்கு இணங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!