16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் காலை கைது

#SriLanka #Student
Kanimoli
2 years ago
16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர்  காலை கைது

களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் வழங்குவதற்காக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 களுத்துறை வடக்கு கல்லுப்பாறையில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!