சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

#SriLanka #Sri Lanka President #Meeting #Ranil wickremesinghe #Lanka4 #IMF #sri lanka tamil news
Prathees
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிதிநிதியின் முதலாவது மீளாய்வுக்கு இணையாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்தக் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீ நிவாசன் உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.

 இதேவேளை, உள்ளூர் கடனை மறுசீரமைப்பதில் வங்கி முறைமை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!