உலக வங்கியின் கல்விப் பணிப்பாளரை சந்தித்த கல்வி அமைச்சர்!
#SriLanka
#Susil Premajayantha
#Ministry of Education
Mayoorikka
2 years ago
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சாவேத்ராவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
லண்டனில் நடைபெற்று வரும் உலகக் கல்வி மாநாட்டின் போது, குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய கல்வி இலக்குகளை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போ கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.