விளம்பரங்கள் தேவையில்லை: நான் பிரபலமடைந்து விட்டேன்! மஹிந்த கஹண்டகம
உயிர் பிழைப்பதற்காக தான் மிகவும் காயப்பட்டது போல் நடித்ததாக, கடந்த வருடம் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட கொழும்பு நகரசபையின் முன்னாள் கவுன்சிலர் மஹிந்த கஹண்டகம தெரிவித்தார்.
மே 9 சம்பவம் குறித்து அவர் பேசிய போது ” என்னை ஒரு அரசிசயல் தலைவராக உருவாக்கியதற்கு நான் அரகலயவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு இப்போது விளம்பரங்கள் தேவையில்லை. ஏனென்றால் அந்தப் போராட்ட சம்பவங்களுக்குப் பின் நான் பிரபலமடைந்து விட்டேன்” எனத் தெரிவித்தார்.
”அந்த போராட்டம் ஒரு சதிச் செயல். முன்னின்று செயற்பட்ட ஆர்வலர்களும் மக்களும் அதை அசட்டை செய்து கொள்ளவில்லை” என அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும் பேர வாவியில் குளிப்பது தனக்குப் பழக்கமான செயல் எனவும் அது தனக்கு புதிதல்ல எனவும் தெரிவித்தார்.