எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலையும் மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் - கலாநிதி நந்தலால் வீரசிங்க

#SriLanka #Central Bank #nandalal weerasinghe
Kanimoli
2 years ago
எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலையும் மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் - கலாநிதி நந்தலால் வீரசிங்க

எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாகப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டிவீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

 கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ‘பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவேகமாக வீழ்ச்சியடைந்துவருகின்றது. அதனுடன் இணைந்ததாக உயர்மட்டத்தில் காணப்பட்ட வட்டிவீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர், சந்தை வட்டிவீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!