வேலைநிறுத்தம் காரணமாக இரவு அஞ்சல் ரயில்கள் ரத்து
#SriLanka
#Batticaloa
#Trincomalee
#Lanka4
#Train
#sri lanka tamil news
Prathees
2 years ago
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பதுளை இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் மாத்திரமே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத்திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எஞ்சிய அஞ்சல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, அடையாள வேலை நிறுத்தத்தை இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பதவிக்கு ஊழல் அதிகாரி ஒருவரை நியமிக்கும் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகள் விரைவில் கோருவார்கள் என தமது சங்கம் நம்புவதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.