போலிச் சான்றிதழைப் பயன்படுத்தி மருத்துவக் கவுன்சிலில் சேர முயன்ற போலி டாக்டர் கைது

#Tamil Nadu #Breakingnews
Mani
3 years ago
போலிச் சான்றிதழைப் பயன்படுத்தி மருத்துவக் கவுன்சிலில் சேர முயன்ற போலி டாக்டர் கைது

அரும்பாக்கம், தர்மபுரி மாவட்டம், நிலஞ்சனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 30. இவர், ஹோமியோபதி படித்து அதே பகுதியில் 'கிளினிக்' நடத்தி, அலோபதி மருத்துவமும் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் நேற்று முன்தினம் சென்னை, அரும்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்துக்கு வந்து, மருத்துவராக பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளார். அப்போது, இவர் சமர்ப்பித்த எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை, மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம் ஆய்வு செய்ததில், அனைத்தும் போலி என தெரிந்தது.

உடனே சந்தோஷ்குமாரை பிடித்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் சந்தோஷ்குமார், தன் நண்பர் உதவியுடன் போலியாக சான்றிதழ்கள் தயாரித்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வந்தது தெரிந்தது.

இதையடுத்து அரும்பாக்கம் போலீசார், சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். உடந்தையாக இருந்த அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4