வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட்! தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
#Cinema
#TamilCinema
Mani
1 year ago

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ். தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வருவதாகவும், படத்தின் டீசர் வரும் ஜூலை மாதம் வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



