பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியது! ரயில்வே ஊழியர் காயம்

#India #Accident #Tamilnews #Breakingnews #Mobile #ImportantNews
Mani
3 years ago
பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியது! ரயில்வே ஊழியர் காயம்
கேரளாவில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியதில் ரயில்வே ஊழியர் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஹாரிஸ் ரஹுமான் என்ற ரயில்வே ஊழியர் வழக்கம்போல கோழிக்கோட்டிலுள்ள ரயில்வே அலுவலகத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது பேண்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய செல்போனிலிருந்து வெப்பத்தை உணர ஆரம்பித்துள்ளார்.

போனின் டிஸ்ப்ளே அவரது உடலை நோக்கி இருந்ததால் அவரால் அந்த வெப்பத்தினை நன்கு உணர முடிந்ததாக தெரிவித்துள்ளார். இதை ஊகித்து போனை பாக்கெட்டிலிருந்து எடுப்பதற்குள் போன் வெடித்துச் சிதறி அவரது பேண்ட் தீப்பிடித்து எரிந்துள்ளது. தொடர்ந்து, ஹாரிஸ் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த மாதம் 8 வயது சிறுமி ஒருவர் வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது வெடித்துச் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் போன் வெடித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4