ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும்: அலி சப்ரி
#SriLanka
#taxes
#Ali Sabri
Mayoorikka
2 years ago
2024 -34 காலப்பகுதிக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கை விண்ணப்பிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கான விண்ணபிப்பதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு செயற்பாடுகள் சேவைப்பிரிவின் ஆசியா பசுபிக்கின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.