மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

#SriLanka #Kilinochchi #Tamil People #Mullivaikkal
Kanimoli
2 years ago
மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் ஆரம்பம் இன்று காலை 8:30 மணயிளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காயச்சுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பொதுமக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்று ஒரு பிடி அரிசி பெற்று அதனை திரட்டி கஞ்சி காய்ச்சப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

 தொடர்ச்சியாக 11 மணியளவில் முல்லை புதுக்குயிருப்பு மண்ணில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும், வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

 முள்ளிவாய்க்கால் கஞ்சி பாரம்பரிய முறையில் சிரட்டையில் வழங்கப்பெறவேண்டும். அந்த வகையில் கிளிநொச்சியில் உள்ள வீடுகளில் திரட்டப்ட்ட சிரட்டைகள் தயார்படுத்தும் எம் தாய் மார்களையும் காணக்கூடியதாக உள்ளது.

  images/content-image/1683710404.jpgimages/content-image/1683710471.jpgimages/content-image/1683710529.jpgimages/content-image/1683710587.jpgimages/content-image/1683710645.jpgimages/content-image/1683710701.jpgimages/content-image/1683710755.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!