குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பொம்மைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு பிளாஸ்டிக் பொம்மைகள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் விற்பனை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பொம்மைகளில் பிளாஸ்டிக் மாத்திரமல்லாது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களும் கலக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை யின் திண்மைக் கழிவு முகாமைத்து பிரிவின் பணிப்பாளர் சரோஜினி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
பிளாஸ்டிக் பொம்மைகள் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதனால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை சிறுவர்களுக்கு கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.