சர்வதேச செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி வைப்பு

#SriLanka #Kilinochchi #Red Cross
Kanimoli
2 years ago
சர்வதேச செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி வைப்பு

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை(ICRC) நிறுவிய மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபரான ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 8ம் திகதி உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் கொண்டாடப்படுகிறது.

 அதனடிப்படையில், சர்வதேச செஞ்சிலுவைதினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளையினரின் ஏற்பாட்டில்அதன் தலைவர்தம்பு சேதுபதி அவர்களின் தலைமையில்பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் ஓர் அங்கமாக இன்றைய தினம்(08) கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு பொருளாதார ரீதியாக நலிவுற்ற கல்வியில் ஆர்வமுள்ள தெரிவுசெய்யப்பட்ட ஆறு மாணவர்களுக்கான மாதாந்தம் 2,500ரூபா பெறுமதியான உதவித்தொகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 குறித்த உதவுதொகையானது கடந்த காலங்களில் மாவட்டத்தில் இரு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது ஆறு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கல்விக்கான உதவுதொகை செயற்றிட்டத்தை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் : உங்களுக்கு இன்று இவ்வாறு வழங்கப்படுகின்ற சிறு துளி நாளை பெரிய வளமாக இருக்கும். இப்பணம் பலரது உழைப்பினால் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. 

எனவே இதனை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தி கல்வித்துறையில் முன்னேற வேண்டும். ஏனெனில் கல்வி ஒன்றினால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும் எமது மாவட்டத்தில் பல்வேறு அவசிய மற்றும் அவசர கால செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

 குறித்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் நிறைவு பெறும்வரை இது மாதாந்தமாக அவர்களுக்கு வழங்கப்படும். மாவட்ட பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமணை முன்பள்ளி உதவிப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட , முன்பள்ளி ஆசிரியர்கள், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

 சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 07ம் திகதி தொடக்கம் 09ம் திகதி வரை தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை, 100 முன்பள்ளிகளுக்கான முதலுதவிப் பெட்டி வழங்கல், சிரமதான நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி உதவு தொகை வழங்கல் முதலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!