வேலை நிறுத்தம் காரணமாக பல தினசரி ரயில்கள் ரத்து
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக ரயில்களின் இயக்கம் தடைப்பட்டுள்ளது.
இருப்பினும் காலை நேரத்தில் 35 அலுவலக ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.
ஒவ்வொரு ரயில் பாதையையும் உள்ளடக்கும் வகையில் பல அலுவலக ரயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பல தினசரி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியிலும் சில ரயில் நிலைய அதிபர்கள் பணிக்கு சமூகமளித்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை, பெலியத்த, மாத்தறை, காலி, மீரிகம மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல ரயில் நிலையங்களின் நிலைய அதிபர்கள் கடமைக்கு சமூகமளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.