பாடசாலை முதல் மாடியில் இருந்து குதித்த 15 வயது மாணவி

#SriLanka #Student #Suicide #kandy #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
பாடசாலை முதல் மாடியில் இருந்து குதித்த 15 வயது மாணவி

கண்டி பெண்கள் பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 குறித்த மாணவி நேற்று (09) காலை 11.30 மணியளவில் பாடசாலையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்துள்ளார்.

 அந்தப் பாடசாலையின் மாணவத் தலைவராகவும் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை, களுகமுவ வத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

 குறித்த மாணவிக்கு ஞாபக மறதி நோய் உள்ளதாக மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!