கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றிய சீனா!
ஷாங்காயில் உள்ள கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை சீனா வெளியேற்றியுள்ளது.
இந்த சம்பவம் கனடாவுடன் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்வதாகும்.
குறித்த கனேடிய இராஜதந்திரியை இம்மாதம் 13ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சீனா அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் இருந்த சீன இராஜதந்திர அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியதால் கனடாவிற்கு பதிலடி கொடுக்க இந்த நிலை ஏற்பட்டது.
சீனாவின் எதிர்ப்பாளரான ஹாங்காங்கில் உள்ள கனேடிய எதிர்க்கட்சி உறுப்பினர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மிரட்டும் சதியில் சீன இராஜதந்திரி ஈடுபட்டதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
கனடாவின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கனடாவின் இந்த முடிவுக்கு கடுமையாக பதிலடி கொடுப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கனடாவின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் சீனாவும் வலியுறுத்தியிருந்தது.