ஜெர்மனில் 150 கிலோ வெடிமருந்து கொண்டு தகர்த்தப்பட்ட பழமையான பாலம்
#Germany
#Bomb
Prasu
2 years ago
ஜெர்மனியில் மோட்டார் பாதை பாலம் ஒன்று வெடி மருந்து கொண்டு வெடித்து வெற்றிகரமாக தகர்க்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 7ம் தேதி அன்று ஜெர்மனியின் லுடென்ஷெய்டில் உள்ள 450 மீட்டர் நீளமுள்ள ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் சில நொடிகளில் இடிந்து விழுந்தது.
1965 மற்றும் 1968 க்கு இடையில் கட்டப்பட்ட பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன. இதைதவிர, அண்டை கட்டிடங்களை பாதுகாக்க ஒரு தடையை உருவாக்க 50 அடுக்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டன.