பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

#Arrest #Pakistan #ImranKhan
Prasu
3 years ago
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். 

அப்போது அவரது காரை சுற்றி வளைத்த ரேஞ்சர்கள், அவரை கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ராணுவத்தை விமர்சித்து பேசியதற்காக அவர்கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. 

எனவே, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரேஞ்சர்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இம்ரான் கானை தாக்கியதாகவும் பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி குறற்ம்சாட்டி உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4