எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரண்டாவது தினத்திலும் முன்னெடுப்பதற்கு தீர்மானம்
#SriLanka
#srilankan politics
Kanimoli
2 years ago
எதிர்வரும் வியாழக்கிழமை (11) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பதிலாக ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரண்டாவது தினத்திலும் முன்னெடுப்பதற்கு இன்றையதினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.