சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கையொன்றை வழங்க உத்தரவு

#SriLanka #sugar #Ranjith Siambalapitiya
Kanimoli
2 years ago
சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கையொன்றை வழங்க உத்தரவு

சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு வர்த்தக முதலீட்டு கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 டொலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலை உயரும் சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சுமார் 13% குறைந்துள்ளதாகவும் உலக சந்தையில் கோதுமை மாவின் விலையும் சுமார் 15% குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!