சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது: சியம்பலாபிட்டிய

#SriLanka #sugar #srilankan politics
Prabha Praneetha
2 years ago
சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது: சியம்பலாபிட்டிய

சந்தையில் சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள சூழ்நிலையில் சீனியின் விலை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சுங்க வரி காரணமாக கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 "ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது, உலக சந்தையில் கோதுமை மாவின் விலையும் 15 சதவீதம் குறைந்துள்ளது.

 முட்டை இறக்குமதி பற்றிக் குறிப்பிடுகையில், 2023 பெப்ரவரி 13ஆம் திகதி முதல் இன்றுவரை 4.5 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!